தில்வாரா கோயில்
தில்வாரா சமணர் கோவில் – பொ.ஊ. 11 - 13 ஆம் நூற்றாண்டில் பளிங்கு கற்களால் கட்டப்பட்ட ஜெயின் கோவிலாகும். உலகின் தலை சிறந்த ஜெயின் கோவில்களுள் ஒன்று. இது தாஜ்மகாலின் கட்டிடக்கலைக்கு நிகராக போற்றப்படுகிறது.மனிதனின் கலை வண்ணத்தில் சிறந்த சிற்ப வேலைபாடுகளுடன் பிரமாண்டமாய் விளங்குகிறது. 1219 மீட்டர்(4000 அடி) உயரத்தில், சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாத போதே, யானைகள் மூலமாக அம்பாஜி மலையிலிருந்து, அபு மலைக்கு பாறைகளை எடுத்து சென்று இந்த அதிசயமான கோவிலை உருவாக்கியுள்ளனர்.ஆதிநாதர் கோவில் / விமல் வஸாஹி கோவில் – 1031 வருடம் கட்டப்பட்ட இந்த முதல் கோவில் ஆதிநாத சுவாமி க்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த கோவிலில் திறந்த வெளி மண்டபமும் தாழ்வாரமும் பளிங்கு கற்களால் சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 54 அறைகளில் 54 ஜைன மகான்களின் சிற்பங்கள் பளிங்கு கற்களால் அழகுற செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.